இதுகுறித்து, இதுவரை வெளியான ஆய்வு முடிவுகள் அனைத்தும், மிக குறுகிய காலங்களில் மேற் கொள்ளப்பட்டவை.இது தொடர்பாக, குறைந்தது 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினால்தான், மொபைல் போன் பயன்படுத்துவதால், என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெளிவாக அறிய முடியும். இதற்காக பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில், நீண்ட கால ஆய்வு நடத்தவுள்ளோம்.
இந்த நாடுகளில் மொபைல் போன் களை பயன்படுத்தும் 20 லட்சம் பேர், இந்த ஆய்வில் பங் கேற்கவுள்ளனர். 18லிருந்து 69 வயதுக்குட்பட்டவர்கள் மட் டுமே, இந்த ஆய்வில் பங் கேற்பர்.மொபைல் போன் பயன்பாடு குறித்தும், இதனால் அவர்களுக்கு எந்த வகையான மாற்றம் அல்லது பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து 'ஆன் லைன்'வாயிலாக கேள்விகள் கேட்கப்படும். இதற்கு அவ்வப்போது அவர்கள் பதில் அளிப்பர். அவர்களுக்கு ஏற்படும் தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் குறித்தும் இதில் கேட்கப்படும். 20 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டும். இதன் முடிவில், மொபைல் போன்களை பயன்படுத்துவதால், எந்தவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு லாவ்ரி சாலிஸ் கூறினார்.
0 comments:
Post a Comment