சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வெஸ்ட்மீட் என்ற இடத்தில், அமோஸ் தெருவில் தனியாக ஒரு இந்திய மாணவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரைத் தாக்கியுள்ளது. அவர் கீழே விழுந்த பின்னும், உதைத்து அடித்துள்ளது. அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று, இச்சம்பவத்தைப் பார்த்து நின்ற உடன் அவர்கள் அடிப்பதை நிறுத்தியுள்ளனர்.இச்சம்பவம், ஏப்ரல் 28ம் தேதி நடந்துள்ளதாக 'சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அது வெளியிடவில்லை.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆஸி.,போலீசார் கூறுகையில்,'இது இனவெறி அடிப்படையில் நடக்கவில்லை. அப்பகுதியில் நிறைய திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும் இந்தியர்களை வெகு சுலபமாகத் தாக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலத்திலும் நடந்துள்ளன. திருட்டு சம்பவங்களில் அப்பகுதியில் 13 பேரை கைது செய்துள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment