700 பேர் எங்கே ?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுப்பபகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று திரும்பாததால் மீனவர் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மாயமாகிப்போன மீனவர்களை கண்டுபிடிக்க கடலோர காவல்படை ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி கன்னியாகுமரி மாவட்டம். இவர்களின் பிரதான வாழ்வின் ஆதாரம் மீன் பிடி தொழிலை நம்பியே உள்ளது. வழக்கமாக மீன் பிடிக்க செல்பவர்கள் ஒன்று அல்லது கூடிப்போனால் 2 வாரத்திற்குள் வீடு திரும்புவர் . கடந்த 2 மற்றும் 3 ம் தேதிகளில் குளச்சல் அதனையொட்டிய சுற்றுப்புற மீனவர்கள் சுமார் 80 படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.

இவர்கள் வருகையை எதிர்நோக்கி இருந்த மீனவர் குடும்பத்தினர் காலம் தாழ்த்திட்டதால் பெரும் கவலை அடைந்தனர். பல்வேறு குடும்பத்தினர் கடற்கரை பகுதிகளில் கூட்டம் , கூட்டமாக கூடினர். மீனவ சங்க பிரதிநிதிகள் , மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

0 comments: