எம்.எல்.ஏ. விடுதலை !!!

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நடைபெற இருக்கும் தேர்தலில் அங்குள்ள மனேகா தொகுதியில் ராஷ்டிரீய ஜனதாதளம் சார்பில் போட்டியிடுபவர் ராம்சந்திர சிங்.

இவர் கலைக்கப்பட்ட சட்டசபையில் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். தனுகுவா என்ற கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு ராம்சந்திர சிங், அவரது உதவியாளர் மற்றும் ஆதரவாளர்கள் 5 பேர் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது, நக்சலைட்டுகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்களில் 5 பேரை நக்சலைட்டுகள் விடுவித்தனர். ராம்சந்திர சிங்கும் அவரது உதவியாளரும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
எந்த ஆபத்தும் இன்றி அவர்கள் இருவரும் லதேகார் போலீஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: