மழைக்கு ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 12 ஆனது

த‌மிழக‌ம் முழுவது‌ம் பெ‌ய்து வரு‌‌ம் கனமழை‌க்கு ப‌லியானோ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 12 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

கடந்த 4 நாட்களில் மட்டும் மழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். காஞ்‌சிபுரத்தை சேர்ந்த யசோதா என்ற பெண் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து பலியானார்.இதே போல திருவாரூரில் சின்னையன் என்பவரும், பெரம்பலூரில் கருப்பாயி என்ற பெண்ணும் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.க‌ன்‌னியாகுமரி மாவட்டம் அருமனையில் ரோஸ்லின் என்ற பெண் சாலையில் நடந்து சென்று கொ‌ண்டிரு‌ந்தபோது அறு‌ந்து ‌கிட‌ந்த மின்கம்பியில் மிதித்த‌தி‌ல் மின்சாரம் தாக்கி பலியானார்.

இதேபோ‌ல் ‌விழு‌ப்புர‌த்தை சே‌ர்‌ந்த வேலாயுதம், வடிவே‌ல், ராமலிங்கம், மதுரையை சே‌ர்‌ந்த வேல்முருகன், நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் குரு‌விகுள‌த்தை சே‌ர்‌ந்த செல்வராஜ், ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் ‌திருவெறு‌ம்பூரை சே‌ர்‌ந்த தாமஸ், ‌விருதுநகரை சே‌‌ர்‌ந்த பூமிநாதன், கடலூரை சே‌ர்‌ந்த அப்பாபிள்ளை ஆ‌கியோ‌ர் மின்னல் தாக்கி பலியானார்கள்.

0 comments: